இத்தாலியன் பாஸ்தா சுவைத்து பாருங்கள்....

John Little John
0

இத்தாலியன் பாஸ்தா இப்படி செய்து பாருங்கள்




இது ஒரு புது வகை  உணவாகும் இதன் இத்தாலிய செய்முறையை இங்கு பார்க்கலாம். பாஸ்தா என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடிய உணவாகும். ஏனெனில்  அதன் அதீத சுவை. இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் பாஸ்தாவின் சுவைக்கு அடிபணியாதவர்களே கிடையாது. அந்த அளவிற்கு பாஸ்தாவின் சுவை சமையலில் தனி இடத்தை பிடித்து வைத்திருக்கின்றது.
பாஸ்தா இத்தாலியர்களின் பராம்பரிய உணவாகும். பாஸ்தா என்ற இத்தாலிய வார்த்தைக்கு பேஸ்ட்  என்று அர்த்தம் .

பாஸ்தா என்பது கோதுமை மாவை அடிப்படையாக வைத்து ரெடி செய்யப்படும் உணவு ஆகும். இந்தக் கோதுமை அதிக புரத சத்து கொண்டது. பாஸ்தா பல்வேறு வடிவங்களில் கிடைக்கும். நூடுல்ஸ் வடிவும் மிகப் பிரபலமானது என்றாலும் பாஸ்தா உருளை வடிவம், நைட்சத்திர வடிவம் என்று  பல  வடிவங்களில் கிடைக்கும்.
சுண்டி இழுக்கும் சுவை கொண்ட பாஸ்தா சில ஆண்டுகளுக்கு முன்புவரை மேலைநாட்டவர்கள்  மட்டுமே உண்ணக்கூடிய உணவாக இருந்தது ஆனால் இன்று அனைத்து தரப்பினரும் உண்ணக்கூடிய உணவாக மாறியுள்ளது. அதேபோல எல்லோராலும் எளிய வகையில் வீட்டிலேயே செய்யக் கூடிய உணவாகவும் மாறி உள்ளது.

இங்கே ஒரு சில இத்தாலியன் பாஸ்தாக்களை இத்தாலியன் செய்முறையில் எப்படி செய்வது என்று பட அமைப்பின் மூலம் காணலாம்

இவ்வகை பாஸ்தாக்களை தினமும் எடுத்துக் கொள்ள இயலாது மேலும் அவ்வப்போது செய்து ருசித்து பார்க்கலாம்

இந்த பதிவில் சில இத்தாலியன் செய்முறை பாஸ்தாக்கள் மட்டும் காண இருக்கிறோம் மேலும் பின்வரும் பதிவுகளில் தொடர்ந்து பல வகையான பாஸ்தாக்களை எப்படி செய்வது என்று பார்க்கலாம்


இங்கே தரப்பட்டுள்ள பாஸ்தாக்கள் படத்தில் காண்பிக்கப்பட்ட செய்முறையில் செய்யும்போது மிகவும் சுவையுடன் இருக்கும்

கோதுமையில் செய்யப்பட்ட பாஸ்தாவில் அதிக அளவில் நியாசின், தயாமினும், நார்ச்சத்தும், புரதச் சத்தும் அடங்கி உள்ளது. 

இதைச் சாப்பிடும் போது பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். இந்த வகை பாஸ்தாக்கள், பி காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் கொண்டது.



இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு என்பது மிகவும் மெதுவாக இருக்கும். பாஸ்தாவுடன் அதிக அளவில் காய்கறிகள் சேர்க்கப்பட்டு சமைக்கப்படும் போது, அதன் பலன்களும் கூடும்.
எனவே, கடைசியில் பாஸ்தா வாங்கும் போது அது முழு தானியங்களால் தயாரிக்கப்பட்டதா என்பதைக் கவனித்து வாங்க வேண்டும்.


செரிமானம் குறைபாடு உள்ளவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.


நூடுல்ஸ் வகை உணவுகளைச் செய்வது போன்றே பாஸ்தாவையும் தயாரிக்கலாம் , சுவைக்காக எப்போதாவது சாப்பிடலாமே தவிர,  அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லதல்ல மேலும் இவற்றோடு அதிக காய்கறிகளை சேர்த்து சமைத்து சாப்பிட நன்மை பயக்கும்.
மேலும் நம் சூழலுக்கு ஏற்ற நம்முடைய பாரம்பரிய உணவுகள் நம்முடைய உடலுக்கும் மனதுக்கும் எப்போதும் நண்பனாகவே திகழ்கிறது என்பதில் ஐயமில்லை. நன்றி..

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top