இப்ப இண்டர்வியூ போகப் போறீங்களா? அப்ப உங்களுக்காக தான் இந்த டிப்ஸ்.. டக்குனு புடிச்சுக்குங்க ஜெயிச்சிடலாம்...

John Little John
0

இந்த  விஷயங்களைப் தெரிந்து கொண்டாலே போதும்.. இன்டர்வியூல மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றி தான்...

இப்ப இண்டர்வியூ போகப் போறீங்களா? அப்ப உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..

எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு கட்டத்துல நல்ல வேலைக்கு போகணும்  நல்ல சம்பாதிக்கணும் உங்க அப்பா அம்மாவை நல்லா பாத்துக்கணும் நம்ம குடும்பத்தை நல்லா பாத்துக்கணும் அப்படிங்கற எண்ணம் கண்டிப்பா இருக்கும். அதற்காக முழு மனதோடு, முழு முயற்சியோட, தன்னம்பிக்கையோட, உண்மையா கடின உழைப்பு இருந்தா போதும் நிச்சயம் வெற்றி நமதே... கீழே சொல்லப்படுகின்ற இந்த விஷயங்களை பொறுமையா படிச்சு தெரிஞ்சுகிட்டு உங்களை அதற்கு ஏற்றார் போல் தயார் படுத்தினால் போதும் எந்த ஒரு இன்டர்வியூவிலும் வெற்றி நமக்கு கிடைக்கும்
வேலைக்கு இன்டர்வியூக்கு செல்லும் போது இந்த விஷயங்களைப் புரிந்து கொண்டாலே போதும்.. உங்களுக்கு வேலை நிச்சயம் கிடைக்கும்.

முதலில் ஒரு நிறுவனத்துக்கு வேலைக்குச் செல்லும் முன்பு, அந்த வேலையைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். மேலும், நிறுவனத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். 

இதே போல் உங்களுடைய துறை சார்ந்த விஷயங்களை பற்றியும் தயார் செய்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் இப்போது உணவக மேலாண்மை துறையில்
( Hotel management) வேலைக்கு விண்ணப்பித்தீர்கள் என்றால், மற்ற நிறுவனங்களில் அந்த வேலை எப்படி உள்ளது, அதில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் என்னென்ன ஆகியவற்றை நினைவில் கொள்ளுங்கள். இவை எல்லாம் நீங்கள் உங்கள் வேலையில் முழு ஈடுபாட்டோடு இருப்பதை வெளிப்படுத்தும்.

நீங்கள் எந்த வேலைக்கு விண்ணப்பித்தாலும், நேர்காணலின் போது அடிப்படையாக சில கேள்விகள் கேட்கப்படலாம். உங்களை பற்றி  கூட சில வார்த்தைகள் பேச சொல்லலாம் எந்த கேள்வி ஆனாலும் தெளிவாகவும் சரியாகவும் பதில் அளிக்க முயற்சிக்க வேண்டும் .இது போன்ற கேள்விகளுக்கான பதில்களை முன்னரே தயார் செய்து கொள்ளுங்கள்.

நேர்காணல் எத்தனை மணி என்பதை உறுதி செய்து கொண்டு, குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு அரை மணி நேரம் முன்னதாகவே செல்லுங்கள். கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கலாம். அரை மணி நேரத்துக்கு முன்பே சென்றால், சிறிது நேரம் மனம் அமைதியடையும். மேலும், நேர்காணலில் பதற்றம் இல்லாமல், பொறுமையாக பதில் சொல்ல முடியும்.

நேர்காணலில் பதற்றமடைய அவசியமே இல்லை. நீங்கள் மனஉறுதியுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டும். உங்களைப் பார்த்தாலே ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி தோன்ற வேண்டும். அந்த அளவுக்கு நல்ல திடகார்த்தமாக தெளிவாக உறுதியாக பேச வேண்டும். தயங்கி தயங்கி பேசாமல், கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் சிரித்த முகத்துடன் உற்சாகமாக பதில் அளியுங்கள்.

 
மேற்கூறப்பட்ட  விஷயங்கள் அனைத்தும் நீங்கள் எந்த வேலைக்கு நேர்காணலுக்கு சென்றாலும் பொருந்தும். இவை தவிர உங்கள் துறை சார்ந்த வேலைக்கு ஏற்றாற் போல் சிந்தித்து தயார்படுத்திக் கொண்டாலே போதும். உங்களுக்கு வேலை நிச்சயம் கிடைக்கும். எப்பொழுதும் மன உறுதியுடன் தன்னம்பிக்கையோடு எந்த ஒரு நற்செயலையும் அணுகும் போது வெற்றி நிச்சயம் உண்டாகும். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக எல்லோருக்கும் வேண்டும். அதற்காக எப்போதும் உண்மையாக உழைக்கும் போது வெற்றி நிச்சயம்....

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top