(Types of Tea ) புத்துணர்ச்சியூட்டும் வகையான டீ

John Little John
0

தேநீரை பற்றி தெரிந்து கொள்வோமா.......



அனைவருக்கும் வணக்கம் எல்லார் வீட்டுலேயும் கண்டிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் டீ போட்டு குடிப்போம். இருந்தாலும் ஒரு நாள் டீ  நல்லா இருக்கும், இன்னொரு நாள் டீ நல்லா இருக்காது.  என்ன காரணம்னு யோசித்து இருப்போமா.. பொதுவாக நாம் டீ போடுவதில் சில தவறு செய்திருப்போம். அந்த தவறை சரி செய்தாலே போதும் தினமும் அருமையான சுவையில்   யார் வேண்டுமானலும் டீயை போட்டுவிடலாம். ஓகே இப்ப சரியான முறையில்  எப்படி  தேநீர் போட வேண்டும் என்று இப்பொழுது பார்க்கலாம்.
 
தேவையான பொருட்கள்:

4 நபர்களுக்கான அளவு:

பால் – இரண்டு டம்ளர்
தேயிலை – ஒரு டேபிள்ஸ்பூன்
ஜீனி – தேவையான அளவு
தண்ணீர் – இரண்டு டம்ளர்


பால் நன்கு கெட்டியாக இருந்தால் 2
 டம்ளர் தண்ணீர் தாராளமாக ஊற்றலாம் அதுவே பால் கொஞ்சம் தண்ணியாக இருந்தால் பாலின் அளவை அதிகரித்து  தண்ணீரின் அளவை குறைத்துக் கொள்ளவும்.


செய்முறை

அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள்.

தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் தேயிலை சேர்த்து நன்றாக கொத்திக்கவிடுங்கள். 3 நிமிடம் கழித்த பிறகு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடங்கள்.

சர்க்கரை சேர்த்தபிறகு 2 நிமிடம் வரை காத்திருக்கவும், பிறகு இரண்டு டம்ளர் பால் சேர்த்து 8 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த சமையம் அடுப்பை குறைவான தீயில் வைத்துவிடுங்கள். விருப்பம் இருந்தால் அதனுடன் இஞ்சி அல்லது ஏலக்காய் சேர்த்துக் கொள்ளலாம் அது உங்கள் விருப்பம்.

10 நிமிடம் கழித்து டீயை அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டி  இதமான சூட்டில் தேநீரை அருந்தலாம். இந்த டீ முன்போல் இருக்கும் டீயின் சுவையை விட மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.


டீயை இந்த செய்முறையில் தான் போடவேண்டும். அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து கொதிக்க விடாமல் இந்த முயற்சித்து பாருங்கள் .

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top