புத்துணர்ச்சி தரும் புதுமையான மாக்டைல்கள் (Mocktails)

John Little John
0
அனைவருக்கும் பிடித்த மாக்டெயில்கள் (mocktails )

 பழச்சாறு மற்றும் சுவையான சிரப்களால் செய்யப்பட்ட  புத்துணர்ச்சியூட்டும் பானங்கள்,
 
இப்பானத்தை பார்த்தவுடன் அனைவரது நாவிலும் எச்சில் ஊறவைத்து, பருக வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்படுத்துகிறது

திருமணங்கள் என்று வரும்போது, உங்கள் வீட்டில் நடக்கும்  விழாக்களிலும் அவற்றை கண்டிப்பாக பரிமாறலாம்.  பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்கள், சோடாக்கள் மற்றும் அடிப்படை ஜூஸ்களைத் தவிர்த்துவிட்டு, மிகவும் சுவையான இந்த மாக்டெயில்களைக் பருகி மகிழுங்கள். உங்கள் விருந்தாளிகளைக் கவரவும், அவர்களின் சுவை மொட்டுக்களைக் கவரும் வகையில், சுலபமாகச் செய்யக்கூடிய சில மாக்டெயில்களின் பட்டியலை நான் இங்கே கொடுத்துள்ளேன்.


Mango Mule

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் 4 துண்டுகள்
தேன் 2 டீஸ்பூன்
மேங்கோ ப்யூரி 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு 3 டீஸ்பூன்
இஞ்சிச்சாறு 1 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் தேவைக்கேற்ப

செய்முறை

ஒரு மாக்டெய்ல் ஷேக்கரில் வெள்ளரிக்காய் மற்றும் தேன் 
மாம்பழக் கூழ் மற்றும் எலுமிச்சை சாற்றைச் சேர்த்து, 10 விநாடிகள் ஐஸ் கட்டிகள் சேர்த்து மூடி, குலுக்கவும்.
ஒரு குவளையில் வடிகட்டவும்.
மேலே சிறிதளவு  இஞ்சிச்சாறு   சேர்த்து கிளறவும். அவ்வளவுதான் Mango Mule ரெடி, ஒரு கண்ணாடி கிளாசில் பரிமாறவும்.

Blueberry Mojito
தேவையான பொருட்கள்
புதினா இலைகள் 8
ப்ளூபெர்ரிஸ்( or )ப்ளூ பெரிஸ் syrup
எலுமிச்சை சாறு 4 டேபிள் ஸ்பூன்
சோடா தேவைக்கேற்ப
சுகர் சிரப்  4 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு மாக்டெய்ல் ஷேக்கரில் மேற்கண்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து மிக்ஸ் செய்து பின்னர் ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்றாக சில வினாடிகள் ஷேக் செய்து கண்ணாடி டம்ளரில் பரிமாறவும்.


Coconut, Cucumber, Lime & Mint Cooler

தேவையான பொருட்கள்

இளநீர் 3கப்
வெள்ளரிக்காய் 2 sliced very thinly
எலுமிச்சைச்சாறு 1/4 கப்
நறுக்கிய புதினா இலைகள் சிறிதளவு
சர்க்கரை தேவையான அளவு

செய்முறை

இளநீர், வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் புதினா இலைகளை  மிக்ஸ் செய்து
1 முதல் 2 மணி நேரம் குளிர வைக்கவும்.
குளிர்ச்சியான மாக்டெயில்களாக பரிமாறவும்.


Pineapple Cobbler
தேவையான பொருட்கள்

ஸ்ட்ராபெரி ஜூஸ் 1 அவுன்ஸ் 
லெமன் ஜூஸ் 5 அவுன்ஸ்
பைனாப்பிள் ஜூஸ் 3 அவுன்ஸ்
சோடா தேவையான அளவு

செய்முறை

ஒரு மாக்டெய்ல் ஷேக்கரில்
எலுமிச்சை மற்றும் பைனாப்பிள் ஜூசை மிக்ஸ் செய்து ஒரு ஹைபால் கிளாசில் வடிகட்டி ஐஸ் மற்றும் சோடா சேர்த்து ஸ்ட்ராபெரி ஜூஸால் மேலே  அலங்கரித்து பரிமாறவும்

Virgin Cucumber Gimlet
தேவையான பொருட்கள்

சோடா 3 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் 4 துண்டுகள்
எலுமிச்சைச்சாறு 2டேபிள் ஸ்பூன்
சுகர் சிரப் 2டேபிள் ஸ்பூன்

செய்முறை

 ஒரு மாக்டெயில் ஷேக்கரில்  சோடா,  எலுமிச்சைச்சாறு மற்றும் சுகர் சிரப் அனைத்தையும் மிக்ஸ் செய்து கண்ணாடி கிளாசில் கிரஸ்ட் ஐஸ் துகள்களுடன்
வெள்ளரி துண்டுகளை வைத்து அலங்காரம் செய்து பரிமாறவும்


இது போன்ற சுவை மிகுந்த, எளிமையாக செய்யக்கூடிய பானங்களை செய்து மனதையும் உடலையும் புத்துணர்ச்சியாக  வைத்துக் கொள்வோம்.





Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top