சுவையான நாவல்பழ ஜூஸ்

John Little John
0
நாவல்பழ ஜூஸ் இப்படி செய்து பாருங்க! ஐயோ செமையா இருக்குங்க ட்ரை பண்ணி பாருங்க!!!

நிறைய பேருக்கு உடம்பில் ஆரோக்கிய ரீதியாக நிறைய பிரச்சனை வரும். இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற நிறைய மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருவார்கள். உடலுக்கு சக்தி அளிப்பதாகவும் பலவகைகளில் பல சத்துகளை கொண்டதும், இந்திய நாட்டை பூர்விகமாக கொண்ட ஒரு சிறந்த பழமாக “நாவல் பழம்” இருக்கிறது. உடல் ஆரோக்யம் பெற்று சிறப்பாக இருக்க நம் வீட்டில் இருந்தபடியே சுலபமான நாவல்பழ ஜூஸ் எப்படி  செய்வது என்பதை பார்க்க போகின்றோம். அற்புதமான ஒரு நாவல்பழ ஜூஸ் ரெசிபி பாக்கலாமா..


தேவையானவை

10 நாவல்பழம் 
10 பேரீச்சம்பழம்
2 வெல்லத்தூள்
1/2 எலுமிச்சம்பழம்

செய்முறை

 நாவல்பழ விதைகளை நீக்கி பேரீச்சம்பழங்களையும் விதையை எடுக்கவும். இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு. தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
வெல்லத்தூளுடன்கால் கட் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து. கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும். வெல்லத்தண்ணீர் ஆறியதும், நாவல்பழ விழுதைச் சேர்க்கவும்.
சிட்டிகை உப்புப் போட்டு, அருந்தலாம். விரும்பினால், எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, பொடியாக நறுக்கிய புதினா இலையை மேலே துவலாம். மணமும் சுவையும் நன்றாக இருக்கும்.

நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது. நாவல் பழத்தின் விதையை பொடி செய்து, அதனை நீரில் கலந்து குடிக்கலாம்.
நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
 
ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

ஊட்டச்சத்துக்கள்

பரிமாறுவது: 1 லிட்டர் 
 கலோரிகள்: 92 கிலோகலோரி  கார்போஹைட்ரேட்: 23 கிராம் 
 புரதம்: 1.2 கிராம் 
கொழுப்பு: 0.5 கிராம் 
சோடியம்: 5மிகி 
ஃபைபர்: 4 கிராம் 
வைட்டமின் சி: 15.6 மிகி

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top