கருப்பு உளுந்து சாதம்… கால்சியம் சத்து..! யாரும் இதை மிஸ் பண்ணாதீங்க!

John Little John
0
கருப்பு உளுந்து சாதம்… சத்து மிகுந்த சாதம் , ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க! அப்புறம் என்ன விடவே மாட்டீங்க, அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க!



இன்றும் பல கிராமங்களில் உளுந்தஞ்சோறு மக்களின் விருப்பமான உணவாக உள்ளது. இச்சோறு திருநெல்வேலி பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

உளுந்தில் நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது வளர் இளம் பெண்களுக்கு ஏற்ற உணவாகும். இதை களி செய்து உண்பதால் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். இது ஆண்களுக்கும் உடல் வலிமையை தருகிறது

இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது.

பாரம்பரிய அரிசி மற்றும் உளுந்து கொண்டு செய்யப்படும் உளுத்தம் சோறு தமிழகத்தின் பராம்பரிய உணவாக உள்ளது. இன்றும் பல கிராமங்களில் உளுத்தம் சோறு மக்களின் விருப்பமான உணவாக உள்ளது.

பல  சிறப்பு நன்மைகள் நிறைந்த உளுந்து சோறு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

அரிசி – 1கப்,
முழு கருப்பு உளுந்து- ½ கப்,  
பூண்டு – 8 பற்கள்,
சுக்கு – பொடி செய்தது 1 தேக்கரண்டி,
 தேங்காய் பால் - 1 கப்
வெந்தயம் - கால் டீஸ்பூன் 
உப்பு- சுவைக்கேற்ப

செய்முறை

முதலில் அரிசி, வெந்தயம் மற்றும் உளுந்தை நன்கு கழுவி சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும், பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

தண்ணீர் சூடானதும் அதில் ஏற்கெனவே கழுவி ஊற  வைத்திருக்கும் அரிசி, வெந்தயம் மற்றும் உளுந்தை அதில் சேர்க்கவும்.  அதனுடன்  பூண்டு,  சுக்கு பொடி, உப்பு சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும்.

இப்போது பாத்திரத்தை மூடியால் மூடி, அரிசி மற்றும் உளுந்து நன்கு வேகும் வரை சமைக்கவும். இதற்கு குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் ஆகும். அவ்வளவுதான்

இப்போது சுடச் சுட உளுந்து சோறு ரெடி. பரிமாறுவதற்கு முன் தேங்காய் பால் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்
தேங்காய் துவையல் உளுந்து சோறுக்கு சரியான காம்பினேஷாக இருக்கும். அப்புறம் என்ன தெரிஞ்சுகிட்டீங்க உடனே செஞ்சு சாப்பிடுங்க! 

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top