புதியன செய்யும் புதினா டீ

John Little John
0
புதினா ஒரு வாசனை நிறைந்த மருத்துவ மூலிகை செடியாகும். இதனை எல்லோர் வீட்டிலும் எளிதாக வளர்க்கலாம். ஆம்  உணவின் சுவையையும் மணத்தையும் அதிகரிக்க புதினாவை பல்வேறு உணவுகளில் சேர்ப்பார்கள். அதோடு இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. எனவே இதனை பயன்படுத்தி சுவை நிறைந்த தேனீரும் போடுவார்கள். புதினாவின் சுவை மற்றும் நறுமணத்தால் இது பெரும்பாலான உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே புதினாவில் தினமும் தேனீர் போட்டு குடித்தால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.



தினமும் புதினா டீ குடிப்பதன் விளைவு


மன அழுத்தம் நீங்கும்:
நாம் அனைவருமே ஒவ்வொரு நாளும் பல வேலைகளை செய்து வருகிறோம். இதனால் நம் உடல் அதிக ஆற்றலை இழப்பதோடு, அதிகமான வேலை சுமை காரணமாக மன அழுத்தமும் ஏற்படுகிறது. எனவே புதினா டீயை தினமும் காலையில் அருந்தி வருவதன் மூலம் மன அழுத்தம் நீங்குகிறது.

செரிமான பிரச்சனை சரியாகும்:

தினமும் புதினா டீ குடித்து வருவதன் மூலம் வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனை நீங்கி உடல் புத்துணர்ச்சி பெரும். அதுமட்டுமில்லாமல் வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களும் , மற்றும் கொழுப்புகள் அழிந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வாய் துர்நாற்றத்தை சரி செய்யும்:
பொதுவாக அசைவ உணவுகள் சாப்பிட பிறகு வாயில் துர்நாற்றம் ஏற்படும். எனவே இதுபோன்ற துர்நாற்ற பிரச்சனைகளுக்கு புதினா டீ ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

முகத்தின் பொலிவை மேம்படுத்துகிறது:

புதினா இலைகளில் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு திறன் கொண்டுள்ளதால் இது சிறந்த கிளென்சர், டோனர் மற்றும் மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. எனவே தினமும் புதினா டீ குடித்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் மற்றும் பருக்கள் போன்றவை நீங்கி முகம் பொலிவுபெறும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் காலையில் 1 கப் புதினா டீ குடிப்பது சிறந்தது. புதினா டீயில் வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் பலவிதமான தாதுக்கள் நிறைந்துள்ளது. இது நம் உடலை எப்போதும்  நோய் எதிர்ப்பு ஆற்றலுடன் வைத்து கொள்ள உதவுகிறது.

 உடல் எடையை குறைக்கிறது:

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் தினமும் 1 கப் புதினா டீ குடித்து வர உடல் எடையை எளிதில் குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

புதினா டீ செய்முறை:

தேவையான அளவு தண்ணீரை சூடேற்றி சிறிதளவு தேயிலை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி விடவும் பின்னர் அதிலே கழுவிய புதினா இலைகளை போட்டு  இரண்டு நிமிடம் மூடி வைக்கவும். தேவைக்கேற்ப இனிப்பு சேர்த்து வடிகட்டி பருகவும். அப்புறம் என்ன புதினா டீயை சுவைக்கலாமா !!!



Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top